வெறுமையாய் இருந்த‌
உள்ள‌த்தில்
வெள்ளமாய்
வந்து சேர்ந்தவனே!!♥

அலைக்கழித்த‌
நெஞ்சத்தை
அமைதிப்படுத்த
என்ன செய்தாய்!!!♥

அவதிப்பட்ட என்
உள்ளத்தை
அடக்கி எப்படி
ஆட்சி செய்தாய்!!!♥

வதைக்கப்பட்ட என்
மனதை உன் வசப்படுத்த
என்ன வசியம்
செய்தாய்!!!♥

இப்படியெல்லாம்
என்னுள்ளத்தை
உரிமையாக்கிக் கொண்டு
என் விழிகளுக்கு மட்டும்
ஏன் வலி கொடுத்தாய்!!!♥

உன் முகம் கண்டு
காதல் செய்ய துடித்த
என் விழிகளுக்கு
மட்டும் ஏன்
வலி கொடுத்தாய்!!!



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்