வெறுமையாய் இருந்த உள்ளத்தில் வெள்ளமாய் வந்து சேர்ந்தவனே!!♥ அலைக்கழித்த நெஞ்சத்தை அமைதிப்படுத்த என்ன செய்தாய்!!!♥ அவதிப்பட்ட என் உள்ளத்தை அடக்கி எப்படி ஆட்சி செய்தாய்!!!♥ வதைக்கப்பட்ட என் மனதை உன் வசப்படுத்த என்ன வசியம் செய்தாய்!!!♥ இப்படியெல்லாம் என்னுள்ளத்தை உரிமையாக்கிக் கொண்டு என் விழிகளுக்கு மட்டும் ஏன் வலி கொடுத்தாய்!!!♥ உன் முகம் கண்டு காதல் செய்ய துடித்த என் விழிகளுக்கு மட்டும் ஏன் வலி கொடுத்தாய்!!!
எப்போதும் என் பெயருக்கு பின்னால் எழுதும் என் அப்பாவின் பெயருக்கு பதில் முதல் முறையாக உன் பெயரை எழுதிய போது அப்பாவின் தோளிருந்து உன் தோளுக்கு மாறிய குழந்தையாகிப் போயிருந்தேன்
என் ஊர், என் மொழி, என் தேசம், என் பாடம், என் பள்ளி, எல்லாம் மறந்து உன் ஊர் நோக்கி உன்னைத்தேடி ஊர்வலமாய் வருகிறது என்மனது உன் நிழலை இருட்டில் கூட விட்டு பிரிவதற்க்கு முடியவில்லை என்னால் உன்னை??????????